ETV Bharat / international

பிரான்ஸின் பிரதமராக ஜான் காஸ்டெக்ஸ் நியமனம் - பிரான்ஸ் ஜான் காஸ்டெக்ஸ்

பாரிஸ்: கரோனாவால் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள பிரான்ஸின் புதிய பிதமராக ஜான் காஸ்டெக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Jean
Jean
author img

By

Published : Jul 3, 2020, 6:29 PM IST

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜான் காஸ்டெக்ஸ் என்பவரை அந்நாட்டு அதிபர் எமானுவேல் மாக்ரான் நியமித்துள்ளார். அந்நாட்டில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எமானுவேல் மாக்ரானின் கட்சி எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது.

பெருநகரங்களில் சிறப்பான வெற்றியைப் பெற்ற மாக்ரானின் கட்சி மற்ற இடங்களில் தோல்வியைக் கண்டுள்ளது அதிபர் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளாதக் தெரிகிறது. இதையடுத்து இன்று காலை அந்நாட்டு பிரதமர் பொறுப்பிலிருந்து எடோர்டு பிலிப்பே ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக ஜான் காஸ்டெக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கரோனா வைரஸ் காரணமாக பெரும் பொருளாதார பாதிப்பைச் சந்தித்துள்ள பிரான்ஸ் மீட்பை நோக்கி நகரவைக்கும் முயற்சியில் அதிபர் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து, நிர்வாகப் பொறுப்பில் நீண்ட அனுபவம் வாய்ந்த ஜான் காஸ்டெக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இதுவரை கரோனாவால் ஒரு லட்சத்து 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க உதவும் டெஸ்லா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.