பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோவிட்-19 அறிகுறி காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்திக்கொண்ட மேக்ரான், வீட்டிலிருந்தே அலுவல் பணிகளை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உச்ச மாநாட்டில் பங்கேற்ற மேக்ரான், வழியில் போர்ச்சுக்கல் நாட்டு பிரதமரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் அதிபர் விரைவில் நலம்பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் போல்சனாரோ உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்புக்கு ஆளாகினர்.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 30 லட்சம் பிரதிகள் விற்பனை; சாதனை படைத்த ஒபாமாவின் புத்தகம்!