ETV Bharat / international

கரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் நாடு!

author img

By

Published : May 17, 2020, 11:09 AM IST

Updated : May 17, 2020, 2:53 PM IST

ஸ்லோவேனியா: கரோனா பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் ஐரோப்பிய நாடு என்ற நிலையை ஸ்லோவேனியா குடியரசு அடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டிருந்த சட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.

கரோனா
கரோனா

சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் கடந்த ஐந்து மாதங்களாக உலகையே அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் உலகளவில் இதுவரை 47 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் ஐரோப்பிய நாடு என்ற நிலையை ஸ்லோவேனியா அடைந்திருக்கிறது. நாட்டில் வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்றும், இனி அசாதாரண சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவையில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அரசு தெரிவித்துள்ளது.

ஸ்லோவேனியாவில் கடந்த மார்ச் 4ஆம் தேதி கரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுவரை நாடு முழுவதும் ஆயிரத்து 465 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் வெறும் 35 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இன்னும் நீடிப்பதால், மருத்துவ நிபுணர்கள் கருத்தின் அடிப்படையில் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்த நடவடிக்கைகள் மே 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சோதனையை அதிகரித்தல், நோயாளிகளை தனிமைப்படுத்துதல், அவர்களின் தொடர்புகளைக் கண்டறிதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசத்தை அணிந்து வெளியே செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள அந்நாட்டு தேசிய பொது சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கான கட்டாய ஏழு நாள் தனிமைப்படுத்தலை ஸ்லோவேனியா குடியரசு நீக்கியுள்ளது. அதே நேரத்தில், வேறு நாட்டிலிருந்து வருபவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் பார்க்க: ரவுண்ட் அப்: நிதியமைச்சரின் நான்கு நாள் அறிவிப்புகள் ஒரு பார்வை!

Last Updated : May 17, 2020, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.