ETV Bharat / international

இரண்டாம் உலகப் போரின் 75ஆவது ஆண்டு நிறைவு நாள் - உலகம் முழுவதும் கொண்டாட்டம் ஒத்தி வைப்பு! - பொலிவிழந்த நாள்

லண்டன் : இரண்டாம் உலகப்போரின் 75ஆவது வெற்றி விழா நாளான இன்று கரோனா ஊரடங்கால் இங்கிலாந்து தலைநகர் லண்டனின் பக்கிங்காம் அரண்மனை முகப்பு பொலிவிழந்து காணப்படுகிறது.

Europe marks 75th anniversary of end of WWII
இரண்டாம் உலகப் போரின் 75ஆவது ஆண்டு நிறைவு நாள் - உலகமுழுவதும் கொண்டாட்டம் ஒத்திவைப்பு!
author img

By

Published : May 8, 2020, 9:50 PM IST

ஜெர்மனியின் நாஜி படைகளை நேசநாடுகளின் படையிடம் சரணடைந்த மே மாதம் 7ஆம் தேதி, இரண்டாம் உலகப்போரின் வெற்றி நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாஜி தலைவர் ஆல்பிரட் ஜோட் சரணடைந்த அந்நாள் நியூயார்க்கிலிருந்து லண்டன், பாரிஸிலிருந்து மாஸ்கோ வரை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Europe marks 75th anniversary of end of WWII
பொலிவிழந்து காணப்படும் பக்கிங்காம் அரண்மனை முகப்பு

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பெரும் திரளாகக் கூடிக்கொண்டாடும் இரண்டாம் உலகப்போரின் வெற்றி நாளான மே 7 ஆம் தேதி நடைபெறவிருந்த 75 ஆவது நாள் விழா, இந்தாண்டு உலகம் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப் படையை நேச நாடுகள் வென்றதை நினைவுகூரும் வகையில், மே மாதத்தில் ராணுவ அணிவகுப்பு விழா மாஸ்கோவில் விமரிசையாக கொண்டாட திட்டமிட்டப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவ்விழா நடைபெறுமென ரஷ்யா ஒத்திவைத்துள்ளது.

அதேபோல, கரோனா தொற்று நோயால் பெரும்பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் அமெரிக்கா அரசும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் அணிவகுப்பு, பிற விழாக்களை தற்காலிகமாகத் தடை செய்துள்ளன.

இதையும் படிங்க : புலிட்சர் விருது பெற்றவர்கள் திருடர்கள் - செய்தியாளர்களை விமர்சித்த ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.