ETV Bharat / international

ஐரோப்பிய நாடுகளில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் - ரோம்

ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து போடும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
author img

By

Published : Dec 27, 2020, 7:43 PM IST

ஐரோப்பிய நாடுகளில் முதற்கட்டமாக முதியவர்கள், மருத்துவப் பணியாளர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. ஜெர்மனியின் பாரத் என் பயோடெக், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த கரோனா தடுப்பு மருந்து, ஐரோப்பாவின் 27 நாடுகளிலுள்ள சுமார் 45 கோடி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

ருமேனியா நாட்டில் முதல் முதலாக இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்ட செவிலியர் மைக்கேலா ஏஞ்சல் கூறுகையில், தடுப்பூசியை போட்டுக்கொண்ட போது எந்தவித வலியும் இல்லை. மக்கள் விழிப்புடன் இருந்து தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

தற்போதுவரை ஐரோப்பாவில், ஒரு கோடியே 60 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 36 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்கள், மூன்று வாரம் கழித்து மீண்டும் இரண்டாவது மருந்தைப் பெற்றுக்கொள்ள வர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே நிலவும் அச்சம், பதற்றத்தை குறைக்கும் நோக்கில் இந்த பெரிய அளவிலான தடுப்பு மருந்து போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜெர்மனி, பிரிட்டன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே கரோனா தடுப்பு மருந்தை செலுத்தும் பணியைத் தொடங்கிவிட்டன.

இதுதொடர்பாக பேசிய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லியன், ஒற்றுமையாக இருக்கும் தருணத்தை உணர்கிறேன் எனக்கூறி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். முன்னதாக, இந்த கரோனா தடுப்பு மருந்தின் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், சுலோவோக்கியா அதிபர் சுசானா கேப்புடோவா, பல்கேரியன் சுகாதாரத்துறை அமைச்சர் கோஸ்டடின் அஞ்சலோய் ஆகியோர் தடுப்பு மருந்து போட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: புதிய வகை கரோனா பரவல் எதிரொலி: வெளிநாட்டினர் ஜப்பான் வரத் தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.