ETV Bharat / international

பொருளாதாரத்தில் பதிந்த வரலாற்று மாணவி - எஸ்தர் டஃப்லோ!

author img

By

Published : Oct 14, 2019, 8:11 PM IST

Updated : Oct 14, 2019, 8:32 PM IST

பொருளாதாரத்துக்கான 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோவுக்கும் இவரது கணவர் அபரிஜித் பானர்ஜிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Esther Duflo

உலக காதலர்களின் தலைநகரான பாரிசில் 1972 அக்டோபர் 25ஆம் தேதி பிறந்தவர்தான் இந்த பொருளாதார காதலி எஸ்தர் டஃப்லோ. இவரது தந்தை மைக்கேல் டஃப்லோ புகழ்பெற்ற கணிதத் துறை பேராசிரியர். இவரது தாய் மருத்துவர்.

பாரிசிலுள்ள பள்ளியில் இளங்கலை பட்டம் பெற வரலாறு பாடத்தை தேர்ந்தெடுத்தார். பள்ளிப் படிப்பின்போதே தனது எதிர்காலம் வரலாறு பாடத்தில் மட்டும் முடிந்துவிடக் கூடாது, வரலாற்றையே மாற்றியமைக்கும் ஒரு நபராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

மாஸ்கோவில் 1993ஆம் ஆண்டு சோவியத் யூனியன் பெரும் கட்டடங்களைத் தனது பரப்புரைகளுக்கு எவ்வாறு பயன்படுத்திக் கொண்டது, அது பரப்புரைகளில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆராயும் ஆய்வறிக்கையில் பணிபுரிந்தார் எஸ்தர் டஃப்லோ.

ரஷ்யா குறித்தப் புரிதலை இதன்மூலம் பெற்ற அவருக்கு, அந்நாட்டு வங்கி தொடர்பான பொருளாதார ஆய்வில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழக்திலும் பொருளாதாரம் தொடர்பான ஆய்வு ஒன்றிலும் பணிபுரிந்துள்ளார்.

இதன்மூலம் பொருளாதாரம் தொடர்பாக ஆழ்ந்த அறிவைப் பெற்ற, 'உலகையே வழிநடத்தும் சக்திவாய்ந்த கருவி பொருளாதாரம்தான்' என்ற முடிவுக்கு வந்தார். தொடர்ந்து பொருளாதாரம் படித்த அவர், 1994ஆம் ஆண்டு இளங்கலை பட்டமும் 1995ஆம் ஆண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார். அதைத்தொடர்ந்து எம்.ஐ.டி.யில் அபரிஜித் மேற்பார்வையில் தனது முனைவர் பட்டத்தையும் பெற்றார். இவர்களுக்குள் ஏற்பட்ட நட்புதான் பின் காதலாக மலர்ந்து, 2015ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

2002ஆம் ஆண்டு தனது 29 வயதில் இணை பேராசிரியராக ஆனார். இதன்மூலம் அமெரிக்காவில் மிகவும் இளம் வயதில் இணை பேராசிரியரானவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

Esther Duflo, எஸ்தர் டஃப்லோ
Esther Duflo

2011ஆம் ஆண்டு உலகில் நிலவும் வறுமையை ஒழிக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கும் 'பூவர் எகனாமிக்ஸ்' என்ற புத்தகத்தை அவரது கணவர் அபரிஜித்துடன் இணைந்து வெளியிட்டார். பலரின் பாராட்டைப் பெற்ற அந்தப் புத்தகத்தை நோபல் பரிசு வென்ற அமிர்த்தியா சென், 'வறுமையின் தன்மை குறித்து உண்மையாகவும் நேர்மையாகவும் விவரிக்கும் இரு அறிவாளிகளின் படைப்பு இப்புத்தகம்' என்று புகழ்ந்தார்.

மேலும், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இவர்களுக்கு, உலகின் கொடிய நோயான வறுமையைப் பற்றியும் அதன் ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காகவும் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Intro:Body:Conclusion:
Last Updated : Oct 14, 2019, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.