ETV Bharat / international

21 மில்லியனைத் தொட்ட கரோனா பாதிப்பு எண்ணிக்கை - WHO அறிவிப்பு - கரோனா பரவல்

கடந்த வாரத்தில், புதியதாக கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 21 மில்லியனைத் தொட்டதாக உலக சுகாதார மையம் (WHO) அறிவித்திருக்கிறது.

21 மில்லியனைத் தொட்ட கரோனா பாதிப்பு எண்ணிக்கை - WHO அறிவிப்பு

author img

By

Published : Jan 26, 2022, 8:27 PM IST

ஜெனீவா: 21 மில்லியனைத் தொட்ட கரோனா நோய்த்தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போதுவரை பதியப்பட்ட எண்ணிக்கைகளில் அதிகபட்சமாகும். இறப்புகளின் எண்னிக்கை பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் ஏறத்தாழ 50,000-த்தில் இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனத்தின் வாராந்திர நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கையைக் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 25) அறிவித்தது.

அதில், 'கரோனா தொற்று 5 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலம் கரோனா தொற்று அதிகரிப்பின் வேகம் குறைந்துள்ளதாகவும் பாதி இடங்களில் மட்டுமே கரோனா தொற்று அதிகரிப்பு நீடிப்பதாகவும்' தெரிவித்தது.

இந்த மாத முந்தைய தினங்களில் நோய்த்தொற்று பாதிப்புகள் 9.5 மில்லியனைத் தொட்டது.

உலக சுகாதார நிலையத்தின் அறிவிப்பின்படி, மத்திய கிழக்கு நாடுகளில் 39 விழுக்காடு நோய்த்தொற்று அதிகரித்துள்ளதாகவும், வட கிழக்கு நாடுகளில் 36 விழுக்காடு நோய்த்தொற்று அதிகரித்துள்ளதாகவும், வட கிழக்கு ஆசியாவில் 36 விழுக்காடாக நோய்த்தொற்று அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இறப்பு எண்ணிக்கை வடகிழக்கு ஆசியா, மத்திய மேற்கு பகுதிகளிலும் அமெரிக்காவிலும் அதிகரித்துள்ளது. மற்ற இடங்களில் குறைந்ததாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கேள்வி எழுப்பிய நிருபரை ஆத்திரத்துடன் வசைபாடிய ஜோ பைடன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.