கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,000-ஐ கடந்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தமாக 15,315 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 9,197 பேர் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
கரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்த நாடாக இத்தாலி உள்ளது. இதுவரை 5,476 இறப்புகள் அங்கு பதிவாகியிருக்கிறது. சீனாவில் 3,270 இறப்புகள், ஸ்பெயினில் 2,182 இறப்புகள் பதிவாகியுள்ளது. 172,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,395 பேர் அதில் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி ஐரோப்பா கண்டத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகிறது.