உலகம் முழுவதும் கரோனா தொற்று ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவருகின்றனர். பல வகையான உருமாற்றம் அடைந்த கரோனா, பல நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது.
பெயரிடப்படாத புதிய நோய்
இந்நிலையில், கனடாவில் பரவிவரும் மர்ம நோய் காரணமாக பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பெயரிடப்படாத இந்த நோய்க்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயினால் பாதிக்கப்படுவார்களுக்குக் கனவில் இறந்தவர்களின் உருவங்கள் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், இது மூளையைத் தாக்கும் புதுவித நோயாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கினறனர். இந்த நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
![Canada](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12045551_sleep.jpg)
செல்போன் கோபுரங்கள் காரணமா?
இந்த நோய் செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு மூலம் பரவலாம் என்றும், கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்வதும் காரணமாகவும் இருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அறிவியல் ரீதியாக இது உறுதியாகப்படவில்லை.
![Canada](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12045551_died.jpeg)
6 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய நோய்
6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நோய் முதல் முறையாகக் கண்டறியப்பட்டதாகவும். டஜன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
![mysterious brain disease](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12045551_brain.jpg)
எப்படிப் பரவுகிறது?
நீண்ட காலம் இது குறித்த ஆராய்ச்சிக்குப் பின்னரும் விஞ்ஞானிகளால் இந்த நோய்க்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. இந்த நோய் சுற்றுப்புறச் சூழலால் பரவுமா? மரபு ரீதியாகப் பரவுமா? மான் கறி அல்லது மீன் இறைச்சி சாப்பிடுவதால் பரவுமா? இது எதுவுமே காரணம் இல்லை என்றால் எப்படித்தான் பரவுகிறது எனப் பொதுமக்களின் கேள்விகளுக்கு விஞ்ஞானிகளால் பதிலளிக்கவோ, விளக்கம் தரவோ முடியவில்லை. இன்னமும் புதிராகவே உள்ளது.