1984ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயிலில் ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொற்கோயிலில் பயங்கரவாத நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த நடவடிக்கையில் பல்வேறு சீக்கியர்கள் உயிரிழந்த நிலையில் இந்த வாரம் இந்தச் சம்பவத்தின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பிரிட்டன் நாட்டின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தன்மன்ஜீத் சிங் கோரிக்கை எழுப்பியுள்ளார். சீக்கியரான இவர் இந்த சம்பவத்தில் அன்றைய பிரிட்டானிய பிரதமர் மார்கர்ட் தச்சருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: காவல் அலுவலர்கள் மீது புதிய வழக்கு!