ETV Bharat / international

நிபந்தனைத் திட்டம் - ஊரடங்கில் சில தளர்வுகளை அனுமதித்துள்ள இங்கிலாந்து

author img

By

Published : May 11, 2020, 6:15 PM IST

லண்டன் : கரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அனுமதித்து 'நிபந்தனைத் திட்டம்' என்ற பெயரில் மாற்றங்களை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

British prime minister Boris Johnson 'modifies' lockdown, launches new alert system
நிபந்தனை திட்டம் : ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அனுமதித்துள்ள இங்கிலாந்து

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பால் இதுவரை இங்கிலாந்தில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 183க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டும், 31 ஆயிரத்து 855 மக்கள் உயிரிழந்தும் உள்ளதாக, அந்நாட்டு சுகாதார நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வரிசையில், கோவிட்-19 வைரஸால் அதிகளவு பாதிப்பைச் சந்தித்து வரும் நாடாக இங்கிலாந்து, தற்போது மாறியுள்ளது. நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, அந்நாட்டு மக்களைக் காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு மேற்கொண்டு வருகிறது.

இங்கிலாந்து நாட்டில் கோவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், சில மாற்றங்களை ஏற்படுத்தி, மக்களின் பதற்றமான மனநிலையைப் போக்க இங்கிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக நேற்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைக்காட்சியில் பேசியபோது, 'கோவிட்-19 பரவுகின்ற தீவிரத்தைக் கண்டறிய அறிவியல் தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் 'ஆர்' வீதம் என்ற குறியீட்டை வைத்து, ஐந்து படிநிலை எச்சரிக்கைகளை வரையறுத்தது.

இங்கிலாந்தில் கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் தாக்கம் இல்லை எனும் முதல் படிநிலையை, நாம் இன்னும் அடையவில்லை. இருப்பினும், மிகவும் ஆபத்தான ஐந்தாம் கட்ட படிநிலையை நாம் கடந்துவிட்டோம். தேசிய சுகாதாரச் சேவை மையத்தின் கடும் உழைப்பால், நாம் இன்று இப்போது மூன்றாம் நிலைக்கு முன்னேறத் தொடங்கியுள்ளோம். இருப்பினும், நம் நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக நாம் ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவர முடியாத நிலை தொடர்கிறது.

வீட்டிலிருந்தபடி வேலை செய்ய வாய்ப்புள்ள தொழில்களில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள், தங்களது பணிகளை திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கலாம். மேலும், வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் மீண்டும் பணியைத் தொடங்க தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

இருப்பினும், அனைத்து தொழிலாளர்களும் பொது போக்குவரத்தை முடிந்தவரை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், நடைபயிற்சி, மிதி வண்டி ஓட்டுதல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொழுதுபோக்குகளில் ஈடுபட அனுமதி அளிக்கப்படுகிறது.

அடுத்த இரண்டு மாத காலகட்டங்களில் நாம் வெறும் நம்பிக்கை அடிப்படையிலோ அல்லது பொருளாதாரத் தேவைக்காகவோ இயங்க முடியாது. அறிவியல், பொது சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நாம் இயக்கப் போகிறோம். இவை அனைத்தும் நிபந்தனைக்குட்பட்டவை என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இங்கிலாந்தில் உள்ளவர்கள் பூங்காக்களில் அமரவும், நடைபயணங்கள் மேற்கொள்ளவும் இனி அனுமதி அளிக்கப்படும். அழகு நிலையங்களுக்குச் செல்லவும், வெளிப்புற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள். இரண்டு மீட்டர் இடைவெளியில் இவை முன்னெடுக்க அனுமதி அளிக்கப்படும். ஊரடங்கின் இரண்டாம் கட்டத் தளர்வு ஜூன் 1 ஆம் தேதியன்று தொடங்கும். வணிக நிறுவனங்களை, கடைகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதும் இதில் அடங்கும்.

நாம் முன்பை விட வலுவாகவும் சிறப்பாகவும் இயங்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால், இப்போதைக்கு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். வைரஸைக் கட்டுப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.

British prime minister Boris Johnson 'modifies' lockdown, launches new alert system
நிபந்தனைத் திட்டம் : ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அனுமதித்துள்ள இங்கிலாந்து

ஸ்காட்லாந்து, வடக்கு ஐயர்லாந்து மற்றும் வேல்ஸில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு அந்தப் பகுதிகளில் முதன்மை அமைச்சர்கள் எந்தத் தளர்வும் அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : இனி உள்ளே வரும் அனைவருக்கும் 14 நாள் கட்டாயத் தனிமை - இங்கிலாந்து திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.