ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் 'பிரெக்ஸிட்' நடவடிக்கையில் பல மாதங்களாகப் பிரிட்டன் அரசு ஈடுபட்டு வருகிறது. அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்து நிலவிவருவதால் வாக்கெடுப்பில் தீர்வு எட்டப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இவ்விவகாரத்தில் சுமூகத் தீர்வு எட்ட முடியாததால் அந்நாட்டின் பிரதமாரக இருந்த தெரசா மே அண்மையில் பதவி விலகினர். இந்நிலையில், பிரெக்ஸிட்டின் தீவிர ஆதரவாளரான போரிஸ் ஜான்சன், பிரிட்டனின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
![ஃபிலிப் லீயின் கடிதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4329883_ph.jpg)
இந்நிலையில், பிரெக்ஸிட் தொடர்பான வாக்கெடுப்பானது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து பிலிப் லீ என்ற உறுப்பினர் லிபரல் கட்சிக்கு தாவியுள்ளார். கட்சி மாறியுள்ள பிலிப் லீ, தனது முடிவை கடிதமாக போரிஸ் ஜான்சனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதன்மூலம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த போரிஸ் ஜான்சன் அரசு மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது.