சா பவுலா: பிரேசில் அதிபர் போல்சனேரோ, சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, அவர் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் சேர்ந்து முகக்கவசம் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டார்.
அதன் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுமக்கள் முன்னுதாரணமாக அதிபர் இத்தகைய செயலில் ஈடுபடலாமா எனப் பலர் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், மாகாணத்தின் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாதது, அதிகளவில் ஆதரவாளர்களைத் திரட்டி பேரணியில் ஈடுபட்டது உள்ளிட்ட விதி மீறல்களுக்காக 110 டாலர்கள் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது என அம்மாகாண ஆளுநர் ஜோவா டோரியா (Joao Doria) தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என பிரேசில் அதிபர் அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தியது.
தடுப்பூசி டோஸ் பாதிப்பின் வீரியத்தைக் குறைக்கும் நோக்கிலே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், கரோனா பாதிப்பு என்பது பொருள் அல்ல என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பிரேசிலில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 12 விழுக்காடு நபர்கள் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகள் முழுமையாகச் செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.