உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை. கரோனா பரவலை தடுத்திட தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், கரோனா தொற்றால் அதிகம் பாதித்த பிரேசில் நாடு, பல்வேறு நாடுகளிலிருந்து தடுப்பூசி வாங்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
அதன்படி, இந்தியாவின் பாரத் பயோடேக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மருந்தை 20 மில்லியன் டோஸ் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பிரேசில் கையெழுத்திட்டுள்ளது. இந்த மருந்தானது வரும் மார்ச் மாதம் முதல் மே மாதத்திற்குள் டெலிவரி ஆகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில், பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இரண்டு தினங்களுக்கு முன்பு, உக்ரைனின் சுகாதாரத் துறை அமைச்சர் மக்ஸிம் ஸ்டெபனோவ், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிலையத்திற்கு சென்று தனது நாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசி வழங்குவது குறித்து விவாதித்தார்.
இதையும் படிங்க: இப்போது எல்லா கண்களும் மீண்டும் நேபாளத்தின் மீதுதான்...!