ETV Bharat / international

கரோனா ஊரடங்கைத் தளர்த்த பெல்ஜியம் திட்டம்! - கரோனா பெல்ஜியம் ஊரடங்கு

புருசேல்ஸ்: கரோனா பெருந்தொற்றுக் காரணமாக பெல்ஜியம் நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கை தளர்த்துவது குறித்து, விரிவான திட்ட அறிக்கையை அந்நாட்டு பிரதமர் சோப்பியா வில்மெஸ் வெளியிட்டுள்ளார்.

belgium
belgium
author img

By

Published : Apr 26, 2020, 8:16 PM IST

ஐரோப்பிய நாடான பெல்ஜியமில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12ஆம் தேதி தொடங்கிய இந்த ஊரடங்கால், ஏராளமான தொழில் துறைகள் முடங்கியுள்ள சூழலில், அதனைத் தளர்த்துவது குறித்து அந்நாட்டுப் பிரதமர் சோப்பியா வில்மெஸ் விரிவான திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'பொது போக்குவரத்துகளில் பயணிக்கும் 12 அல்லது அந்த வயதுக்கும் மேற்பட்டோர் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். ஆகையால், மக்களுக்கு முகக் கவசங்கள் கிடைக்கும் பொருட்டு, முதல் கட்டமாக மே 4ஆம் தேதி முதல் துணிக் கடைகளைத் திறக்கலாம்.

பிறகு, ஒரு வாரம் கழித்து மற்ற கடைகளைத் திறக்கலாம். மேலும், மே 18ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாம். ஆனால், ஒரு வகுப்பறையில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலக் கூடாது.

கஃபே, உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்கு மேல் திறக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடியே 14 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெல்ஜியம் நாட்டில், இதுவரை 44 ஆயிரத்து 293 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்து 679 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : லைசால்... பிளீச்சிங் பவுடர்...ட்ரம்ப் பேச்சைக் கேட்டு விபரீத முடிவெடுத்த நியூயார்க் வாசிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.