ETV Bharat / international

நீண்ட போராட்டம்... 137 ஆண்டுகளுக்குப் பிறகு தேவாலயம் கட்ட அனுமதி! - Sagrada Familia

பார்சிலோனா: முக்கியமான சுற்றுலாத் தலமாக பார்க்கப்பட்ட பார்சிலோனாவின் கட்டி முடிக்கப்படாத தேவாலயத்தை கட்டி முடிப்பதற்கான அனுமதியை 137 வருடங்களுக்குப் பிறகு அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.

சேக்ரடா பேமிலியா தேவாலயம்
author img

By

Published : Jun 9, 2019, 12:10 PM IST

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் அமைந்துள்ள ‘லா சேக்ரடா ஃபேமிலியா’ என்கிற தேவாலயம் 137 வருடங்களாக கட்டி முடிக்கப்படாத நிலையில் இருந்து வருகிறது. ரோமன் கத்தோலிக்க தேவாலயமான இது காடலான் கட்டடக்கலைஞர் அந்தோணி காடியால் வடிவமைக்கப்பட்டது. இந்த தேவாலய கட்டடப் பணிகள் பாதியில் நிறுத்தபட்டிருந்தாலும், ஒவ்வோரு வருடமும் தேவலாயத்தை சுற்றிப் பாா்ப்பதற்காக 45 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுகொண்டிருந்தனர். மேலும், இரண்டு கோடி பேர் தேவாலயம் அமைந்துள்ள பகுதியை பார்வையிடுவதற்காக வந்து சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அந்த தேவலாயத்தைத் தொடா்ந்து கட்டுவதற்கான உாிமையை கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை 2026ஆம் ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, யுனெஸ்கோ நிறுவனம் பார்சிலோனா நகர அலுவலர்களுக்கு $ 4.1 கோடி(41 மில்லியன் டாலர்) அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.