ஆஸ்திரியா நாட்டில், வியன்னா பகுதியில் ஸ்கொன்ப்ரூன் உயிரியல் பூங்கா (Shoenbrunn Zoo) உள்ளது. இங்கு வசிக்கும் ஒரு வயதான கிபாலி யானைக்கு காட் மதராக ஆஸ்திரியா பொருளாதார அமைச்சர் மார்கரெட் ஸ்க்ராம்போக் (Margarete Schramboeck) அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொற்று நோய் குறித்த தகவலை மக்களுக்கு தெரிவிப்பதற்காக, உபயோகிக்கப்பட்ட பெரிய யானையின் கார்ட்டூனுக்கு நன்றி தெரிவிக்கும் முயற்சியாகும்.
இதுகுறித்து அமைச்சர் மார்கரெட் கூறுகையில், "மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற கிபாலி யானையை நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். கிபாலி யானையின் உயரத்தின் அளவிற்கு இடைவெளி விட்டு மக்கள் பயணிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: இடம் இல்லை... பிரதமரை வெளியேற்றிய உணவகம்