சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட முதலை 1936ஆம் ஆண்டு மிசிசிப்பியில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டு வந்த முதலை, உலகப்போருக்குப் பின் ஹிட்லர் உயிரிழந்ததால் அங்கிருந்து 1946ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
எனினும் முதலையை ஹிட்லர் வளர்த்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ரஷ்யா கூறிவந்தது. இச்சூழலில் முதலை மாஸ்கோவில் நீண்ட காலமாக வளர்க்கப்பட்டு வந்தது. ஹிட்லர் உயிரிழந்து 75 வருடங்கள் ஆன நிலையில், அவர் வளர்த்ததாகக் கூறப்படும் சார்ட்டன் தனது 84ஆவது வயதில் உயிரிழந்தது.