இந்தியாவிற்கான பிரிட்டன் தூதராக அலெக்சாண்டர் எல்லிஸ்-ஐ நியமித்து பிரிட்டன் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக பதவியில் இருந்த பிலிப் பார்ட்டன் ஓய்வுபெற உள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
53 வயதாகும் அலெக்சாண்டர் எல்லிஸ் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசராக இருந்துள்ளார். இவர் ராஜாங்க ரீதியிலும், பாதுகாப்புத்துறையிலும் மிக முக்கிய பங்கை ஆற்றியுள்ளார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு அலெக்சாண்டர் எல்லிஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "என்னுடைய குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு செல்லவிருப்பது மிகுந்த உற்சாகமாக இருக்கிறது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் நான் இங்கிலாந்திற்கு வெளியே வாழ்ந்த முதல் நாட்டிற்கு (இந்தியா) திரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
'விராட் கோலியை காண ஆவல்'
பிரிட்டனில் வாழும் இந்தியர்களின் பங்களிப்பு மகத்தானது என்று தெரிவித்த அவர், இருநாட்டில் வாழும் திறமைமிக்கவர்களை போற்றும் வகையில் தனது திட்டப்பணி இருக்கும் என அலெக்சாண்டர் எல்லிஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தை தாம் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை காண தாம் ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பிரிட்டன் பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து!