சுவீடன்தலைநகர் ஸ்டாக்ஹோமின் வடக்குப் பகுதியில் உள்ள ரிம்போ நகரில் கார் பந்தயம் நடத்தப்பட்டது. அதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பார்வையாளர் கூடத்தில் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும், இந்த விபத்து தொடர்பாக ஒட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா என்ற தகவல் வெளியாகவில்லை.