அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் தாவோ போர்ச்சன் லின்ச். இவருக்கு வயது 100. இந்தியாவில் பிறந்த இவர், சிறு வயதில் கடற்கரையில் ஒரு சிலர் யோகா பயில்வதை முதல்முறையாக பார்த்துள்ளார். அதன் மேல் ஏற்பட்ட ஒரு இனம்புரியாத ஈர்ப்பால் அதனை கற்றுக்கொள்ள முடிவு செய்தார். இப்போது அவரின் வாழ்நாளே யோகாவாக மாறி விட்டது. பிறகு, இளம் வயதிலேயே நியூயார்க் சென்று அங்குள்ளவர்களுக்கு அவர் யோகா பயிற்சி அளிக்க தொடங்கினார்.
நூறு வயதிலும் உற்சாகத்துடன் இருக்கும் அவர் வாழ்க்கையின் ரகசியம் என்ன தெரியுமா...?. தினமும் காலையில் எழுந்து இந்த நாள்தான் வாழ்க்கையின் சிறந்த நாளேன அவர் எண்ணிக்கொள்வாராம். இதுதான் அவரின் வாழ்க்கை ரகசியம் என அவரே கூறிகிறார். மாணவர்களுக்கு லின்ச் ஒரு வழிகாட்டியாகவே திகழ்கிறார். சுவாசிக்கும் போது நாம் மூச்சை இதயம் வரை இழுக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் லின்ச், இதுதான் சரியான முறை என்றும் அனைவருக்கும் அறிவுரை கூறுகிறார்.
இவர் "அமெரிக்கா காட் டாலன்ட்" என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடரிலும் கலந்து கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இவரின் சாதனையை போற்றும் விதமாக, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது.