'அட எருமை மாடே எந்திரி' அப்படி ஆரம்பிக்கும் இந்த தூக்கப்பிரியர்களின் நாள். அது 'ஒன்னுமில்லைங்க எங்க அம்மா என் மேல ரொம்ப அன்பா இருக்கிறாங்க...' அதான் அப்படினு சாமாளிப்போம். அப்படி தூக்கத்தை தனது ஜென்ம பயனாக கொண்டவங்களுக்குத் தான் இந்த நாள்.
தூக்க கலக்கத்தில் உளறுறேன்னு நினைக்கிறேன். வாங்க கதைக்கு போவோம்.
ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை அதன் விளைவுகள் அதிகமாக இருக்கும். அதனால் முழுமையான தூக்கம் முக்கியமானது. அப்படிப்பட்ட தூக்கத்தை செலிபிரேட் பண்ணதான் இன்று உலக தூக்க தினம் கொண்டாடப்படுகிறது.
யார் யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
- பிறந்த குழந்தைகள்: 14-17 மணி நேரம்
- 4-11 மாத குழந்தைகள் : 12-15 மணி நேரம்
- 1-2 வயது குழந்தைகள் : 11-14 மணி நேரம்
- 3-5 வயது வரை : 10-13 மணி நேரம்
- 6-13 வயது வரை : 9-11 மணி நேரம்
- 14-17 வயது வரை: 8-10 மணி நேரம்
- 18-25 வயது வரை: 7-9 மணி நேரம்
- 26 வயதுக்கு மேற்பட்டோர் : 7-8 மணி நேரம்
தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. சிலருக்கு அதிகம் தூக்கம் வரும்... சிலருக்கு தூக்கமே வராது. இது இரண்டுமே நல்லதல்ல.
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாளில் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். உலகிலேயே இந்தியர்கள்தான் மிகக் குறைவாக உறங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்தியர்கள், நாள் ஒன்றுக்கு 6.55 மணிநேரம் மட்டுமே உறங்குவதாக, தெரியவந்துள்ளது. இந்தியர்களிடையே உடல்நலம் பராமரிப்பதில் போதிய அக்கறை இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் வேலைப்பளு, உணவுப் பழக்க வழக்கம் உள்ளிட்டவை காரணமாக, அவர்கள் மிகக்குறைவான நேரமே உறங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் சொல்ல வருவதென்றால் சீரான தூக்கம் சிறப்பான வாழ்வை உருவாக்கும் என்று சொல்லிக் கொண்டு, இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்க...ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி: அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ. 74.44 ஆக வர்த்தகம்.