மாஸ்கோ: இது தொடர்பாக பேசிய அவர், " இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னை குறித்து எனக்கு தெரியும். அண்டை நாடுகளுடன் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதேநேரம், இந்த பிரச்னையை பிறநாடுகளின் தலையீடு இல்லாமல் தீர்த்துக்கொள்ளும் வல்லமை இந்தியப் பிரதமர் மோடிக்கும், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கும் உண்டு. அவர்கள் இருவரும் பொறுப்பு வாய்ந்த தலைவர்கள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
மேலும், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு நம்பிக்கையின் அடிப்படையில், மிக வேகமாகவும், வெற்றிகரமாகவும் வளர்ந்துவருகிறது என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் அமைத்துள்ள குவாட் அமைப்பை புதின் விமர்சித்துள்ளார். இதில், இந்தோ பசுபிக் பிராந்தியம் சீனாவின் செல்வாக்கை கொண்டிருக்கவேண்டும் என்ற மறைமுக பொருள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு சீனாவை குறை சொல்வது தவறு: ஊடகம் மூலம் அமெரிக்காவை சாடும் ரஷ்யா