உலகளவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், அதன் தாக்கம் ஆசிய நாடுகளில் தற்போது தீவிரமடைந்துவருகிறது. உஸ்பெகிஸ்தானில் தற்போது வைரஸ் தாக்கம் தலைதூக்கிவரும் நிலையில், அந்நாடு வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு கோரிக்கையை வைத்துள்ளது.
உஸ்பெகிஸ்தானில் நீண்ட நாட்களாக பருத்தி உற்பத்தி மிக முக்கிய பொருளாதார நடவடிக்கையாக உள்ளது. அங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பருத்தி உற்பத்தி மற்றும் கைத்தறி தொழிலை நம்பி பிழைத்துவருகின்றார்.
அதேவேளை தொழிலாளர்கள் ஒடுக்கு முறையுடன் நடத்தப்பட்டு, அவர்கள் சுரண்டப்படுவதாக கடந்த 2006ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. அரசின் லாப நோக்கிற்காக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வதைக்கப்படுவது உலக நாடுகளின் பார்வைக்கு தெரியவர, மனித உரிமை ஆணையம் மற்றும் உலக தொழிலாளர் கூட்டமைப்பு இவ்விவகாரத்தில் தலையிட்டது.
இதையடுத்து, 2006ஆம் ஆண்டிலிருந்து உஸ்பெகிஸ்தானிடம் பருத்தி தொடர்பான வர்த்தகத்தை உலக நாடுகள் புறக்கணிக்க தொடங்கின. இந்நிலையில், கரோனாவால் கடும் பாதிப்பை உஸ்பெகிஸ்தான் கண்டுள்ளதாகவும், தங்களுடன் பருத்தி வர்த்தகத்தை உலக நாடுகள் மீண்டும் தொடங்க வேண்டும் எனவும் உஸ்பெகிஸ்தான் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜிடிபி 1.1% ஆக சரிய வாய்ப்பு - எஸ்பிஐ வங்கி தகவல்