கொரியா தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே, கடந்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம், தாய்லாந்து தலைநகர் ஹனாயில் இரண்டாம் உச்சிமாநாடு நடைபெற்றது.
பல்வேறு தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த உச்சி மாநாட்டில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இதனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி எனவே கருதப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரிய எல்லைப் பகுதியில் வைத்து அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பை தொடர்ந்தாவது பேச்சுவார்த்தை விறுவிறுப்பாகுமென எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், கருத்து வேறுபாடு காரணமாகப் பேச்சுவார்த்தை நடப்பதில் இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கிறிஸ்டோபர் ஃபோர்ட், "வடகொரியாவுடன் மீண்டும் அணு ஆயுத ஒழிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது.
அதிபர் ட்ரம்ப்பிலிருந்து, மூத்த அலுவலர்கள்வரை இதனைத்தான் விரும்புகிறார்கள். அவர்களுடைய பதிலை எதிர்நோக்கியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க : கொரோனா பரப்பிய அதிகாரி - வடகொரியாவில் சுட்டுக்கொன்ற அரசு