ஆப்கானிஸ்தானில் உள்ள லஷ்கர்கா பகுதியில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். தலிபான் இயக்கத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 40 தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் எட்டு பேரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 10 நாள்களாக லஷ்கர்கா பகுதியில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க படையினருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் அங்கு தலிபான் அமைப்பு மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. அங்குள்ள பெரும்பாலான ஊரகப் பகுதிகளை தலிபான் தற்போது தனது கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இதையும் படிங்க: வூஹானில் இருந்தே கரோனா பரவியது: அமெரிக்க குடியரசு கட்சி