இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், "உலக சுகாதார அமைப்புக்கு உறுப்பு நாடுகள் உரிய நேரத்தில் தங்களது பங்களிப்பை வழங்குவது அவசியம். இந்த பொறுப்பிலிருந்து தற்போது அமெரிக்க நழுவப் பார்க்கிறது.
கரோனா வைரஸ் பேரிடரை எதிர்கொள்ளத் திணறிவரும் அமெரிக்கா அதன் இயலாமையை மறைக்க, பேரிடருக்கான முழு பொறுப்பையும் சீனா மீது சுமத்தி வருகிறது" எனக் குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, கரோனா பேரிடரைத் தடுக்கும் பொறுப்பை உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாகவும், ஆகையால் அந்த அமைப்புக்கு அமெரிக்கா தர வேண்டிய பங்களிப்பை நிறுத்திக்கொள்ளுவதாகவும் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்தார்.
இதனிடையே, கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒரு ஆய்வுக்கூடத்திலிருந்து தான் வெளியுலகுக்குப் பரவியதாக ட்ரம்ப்பும், அவரது நிர்வாகமும் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு உலக சுகாதார அமைப்பும், சீனாவும் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளன.
சீனாவின் வூஹானில் நகரில் உள்ள ஒரு இறைச்சி சந்தையில் தோன்றியதாகக் கூறப்படும் கரோனா வைரஸ், தற்போது உலகெங்கிலும் பரவி வருகிறது.
2019 டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் காரணமாக இதுவரை உலகளவில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொருளாதாரம் வரலாறு காணாத அளவிற்குச் சரிவைச் சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : மே 31 வரை சென்னை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம்!