ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதிக்குள் குண்டுவெடிப்பு.. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! - UN

ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருகின்றனர்.

blast in Afghanistan
blast in Afghanistan
author img

By

Published : Oct 9, 2021, 1:56 PM IST

காபூல் : ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் குந்தூஸ் (Kunduz ) மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஷியா பிரிவினர் மத சிறுபான்மையினராக வசித்துவருகின்றனர்.

இவர்கள் வெள்ளிக்கிழமையான (அக்.8) நேற்று அங்குள்ள ஷியா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

70க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. கண்டனம்

இது குறித்து ஐ.நா., விடுத்துள்ள அறிக்கையில், “உலகில் அனைவரும் தங்கள் மதத்தை கடைபிடிக்க உரிமை உண்டு. ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள். குண்டு வெடிப்பு தாக்குதலில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UN
ஐ.நா. கண்டனம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் நாட்டை தலிபான்கள் பிடித்துள்ளனர். இந்நிலையில், ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 170 பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது ஷியா மக்கள் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது.

சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் ஷியா முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டிலிருந்து தப்பிய 64 இலங்கை அகதிகள்: இன்டர்போல் உதவியை நாடியுள்ள காவல்துறை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.