ஆசியாவிலேயே தன்பால் ஈர்ப்பாளர்கள் திருணம் செய்துகொள்ள சட்டத்தை கொண்டுள்ள ஒரே நாடு தைவான். தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்ள வழிவகுக்கும் சட்டத்தை, 2019ஆம் ஆண்டு மே மாதம் தைவான் நிறைவேற்றியது.
அதைத்தொடர்ந்து தைவான் நாட்டில் 4021 தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில், தைவான் நாட்டில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு சமீபத்தில் ஒரே நேரத்தில் திருமண நடைபெற்றது.
அதில், தைவான் ராணுவத்தில் உள்ள இரண்டு தன்பால் ஈர்ப்பு ஜோடிகள் திருமணம் செய்துகொண்டர். தைவான் நாட்டில் ராணுவத்தில் பணிபுரியும் தன்பால் ஈர்ப்பாளர்கள் திருணம் செய்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.
26 வயதான லி லி-சென் என்பவரை தைவான் நாட்டு ராணுவ லெப்டினென்ட் சென் யிங்-ஹுசுவான் (27) திருமணம் செய்துகொண்டார். அப்போது பேசிய சென் யிங்-ஹுசுவான், "எங்கள் நாட்டு ராணுவம் மிகவும் திறந்த மனதுடன் தன்பால் ஈர்ப்பாளர்களை ஏற்றுக்கொள்கின்றனர்.
இதனால் ராணுவத்தில் இருக்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் எவ்வித பயமும் இன்றி இருக்கலாம். காதல் போன்ற விஷயங்களில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்" என்றார்.
அதேபோல 37 வயதான யூமி மெங் 36 வயதாகும் ராணுவ மேஜர் வாங் யியை திருணம் செய்துகொண்டார். யூமி மெங் திருமண ஆடையை அணிந்திருக்க, வாங் தனது ராணுவ சீருடையை அணிந்திருந்தார்.
இதையும் படிங்க: பயங்கரவாத தாக்குதலுக்கு ஆதரவாக ட்வீட்? முன்னாள் பிரதமரின் செயலுக்கு எதிர்ப்பு!