தென் பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வடக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிஜி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 7.9 மற்றும் 7.5 என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தற்போது 7.7 ரிக்டர் அளவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக வடக்கு நியூஸிலாந்து, வணூட்டு, புதிய கலிடோனியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ’லாயல்டி தீவின் தென்கிழக்கு பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கடற்கரைப் பகுதிகளில் கணிக்கமுடியாத அளவில் சுனாமி பேரலைகள் அசாரணமாக இருக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஏமன் உள்நாட்டுப் போர்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகள்!