மக்கள் போராட்டம் மேல் நம்பிக்கை வைத்திருந்த ஹு யாபங்கை, பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியது சீன கம்யூனிஸ்ட் கட்சி. இதனைத் தொடர்ந்து அவர் 1989 ஏப்ரல் 15ஆம் தேதி இறந்தார். இதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தியனன்மென் சதுக்கத்தில் கூடினார்கள். நாளுக்கு நாள் மாணவர்கள் இக்கூட்டத்தில் அதிகமாக கலந்துகொண்டனர்.
இப்போராட்டத்தை அரசுக்கு எதிரானதாக கருதிய சீன அரசு அதனை அடக்க நினைத்தது. எனவே, அமைதி வழியில் நடைபெற்ற அப்போராட்டத்தை ராணுவத்தை அனுப்பி அங்கிருந்த அனைத்து இளைஞர்களை சுட்டுத்தள்ளியது சீன அரசு. இன்று வரை இந்தப் படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி சரியான தகவல் ஏதும் வெளிவரவில்லை. ஆனால், அந்த இடத்தில் ஒரு லட்சம் இளைஞர்கள் கூடியதாகக் கூறப்படுகிறது.
சீன வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் போராட்டமாக இதனை வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.