ETV Bharat / international

கோவிட் - 19 தொற்றுக்குப் பிறகான உலகம் - இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் கருத்து - வரலாற்றாசிரியர் யுவல் நோவா ஹராரி

கரோனா பாதிப்புக்குப் பிறகான உலகம் முன்பு போல் இருக்காது என கூறும் இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் யுவல் நோவா ஹராரி, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். அதைப் பற்றிய சிறப்பு தொகுப்பு...

THE WORLD AFTER COVID-19
THE WORLD AFTER COVID-19
author img

By

Published : Apr 18, 2020, 1:32 PM IST

நெருக்கடியான சூழல் எப்போதும் மனிதனுக்கு நன்மையையும் தீமையையும் ஒருசேர அளிக்கிறது. ஒவ்வொரு நெருக்கடி காலத்தின் போதும் இந்த உலகம் எதிர்பாராத மாற்றத்தை சந்திக்கிறது. கோவிட் 19 தொற்றுக்கு எதிரான போர் என்பது உலகப்போருக்கு நிகரானது, 200 நாடுகள் இந்த நோய்க்கிருமியை ஒழிக்க போராடிவருகிறது. இந்தப் போரில் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் புதுமையான, கடுமையான திட்டங்களை செயல்படுத்தி போராடி வருகின்றன. இந்நிலையில், கோவிட் 19 தொற்றுக்குப் பிறகான உலகம் முன்பு போல் இருக்காது என இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் யுவல் நோவா ஹராரி கருத்து தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் மாற்றத்துக்கான விதைகள் விதைகப்பட்டிருப்பதைப் பற்றி நோவா விளக்குகிறார்.

இனிவரும் காலங்களில் இப்படி ஒரு பெருந்தொற்றை உலகம் எதிர்கொள்ளும் போது, பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதவர்கள் அரசாங்கத்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். சீனா, தென் கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி இதுபோன்ற தொற்றை எதிர்கொள்வதற்கான பணியில் இறங்கிவிட்டன. தைவான் அரசாங்கம் எலக்ட்ரானிக் வாட்ச்கள் மூலம் வெளிநாட்டவரின் செயல்பாடுகளை கண்காணிக்கிறது.

ஜனநாயகத்தன்மை பலவீனமாக உள்ள நாடுகளின் தலைவர்கள், முழு சர்வாதிகாரத்தை கையிலெடுப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஆர்பன், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளில் சில மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டின் அதிகாரப்போக்கு மேலோங்கியிருக்கிறது. கொலம்பியாவில் சில அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியாட்சிகளில் ராணுவத்தின் தலையீடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 தொற்றால் பல நாடுகளின் தேர்தலில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான முதற்கட்ட பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தாலி, வட மேசிடோனியா, செர்பியா, ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் எத்தியோபியா ஆகிய நாடுகளின் உள்ளாட்சி, பொது தேர்தல்கள் தள்ளிபோயுள்ளன. ஆன்லைனின் வாக்குப்பதிவு நடத்தி தேர்தலை முடிக்க சில அரசாங்கங்கள் திட்டமிட்டு வருகின்றன. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகின்றன.

விளிம்புநிலை மக்களுக்கு இந்த சூழலில் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் உதவிவருகின்றனர். சீனாவைச் சேர்ந்த மாணவர்கள், சமூக வலைதளங்களில் வூகான் மருத்துவமனைகள் என்றொரு இயக்கத்தை தொடங்கி விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்கின்றனர். பிலிப்பைன்ஸில் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு சார்ந்த அமைப்புகள் இணைந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி திரட்டி வருகின்றன. இந்தியாவில் பெருநிறுவன முதலாளிகள், அரசு ஊழியர்கள், அரசு சாரா அமைப்பினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்கின்றனர். தினக்கூலிகள், ஆதரவற்றவர்களுக்கு சில அமைப்புகள் உணவு வழங்குகின்றன. சீனாவில் நாய்கள், வௌவால்களை வெட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நோய்க்கான அறிகுறிகள் தெரியும் முன்பே நோயைக் கண்டறிய வேண்டும். இதனால் கணிப்பு நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவரப்படும். பெரும்பான்மையான நாடுகள் டெலிமெடிசின் (மருத்துவரை தொடர்பு கொண்டு ஆலோசித்தல்) முறையை நம்பி இருக்கிறது. இது மருத்துவ ஊழியர்களின் பணி அழுத்தத்தை குறைக்கும், போக்குவரத்து செலவும் மிச்சம். பொதுமக்கள் மருத்துவ காப்பீடு செய்வது அதிகரிக்கவுள்ளது. மறுமுனையில் அனைத்து நாடுகளும் தங்கள் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. வென்டிலேட்டர்கள், முக்கியமான மருந்துப் பொருட்கள் தயாரிப்பதில் பின்தங்கியுள்ள இந்தியா, அவசர கால மருந்துப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

பேரணிகளும் போராட்டங்களும் தெருக்களை விட்டு மறைந்து, சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன. எகிப்து போன்ற நாடுகளில், குடிமக்கள் தங்கள் கருத்துகளை ஆன்லைன் மூலம் தெரிவித்துவருகின்றனர். பிலிப்பைன்ஸ் அதிபருக்கு எதிராக ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்டானது கவனிக்கத்தக்கது. பொருட்களின் விலையை அதிகரிப்பது, அவசர கால பொருட்களை கொள்ளையடிப்பது, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை என மக்களுக்கு சிரமங்களை அதிகரிக்கும் வாய்ப்பு எழுந்துள்ளது. இதனால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி நைஜீரிய அரசு அமைப்பு அதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வைரசை கட்டுப்படுத்தும் உத்திகளை ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். கரோனா தொற்றால் பெரும் பாதிப்பை சந்தித்த இத்தாலியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் எகிப்து நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜெர்மானிய தடுப்பு மருந்து அமெரிக்கர்களுக்கு மட்டும் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார். அதேபோல் சீனாவும் இந்த சூழலில் பொறுப்பற்று செயல்படுகிறது. இந்த வேளையில், சார்க் கூட்டமைப்பு நாடுகளை ஒன்றிணைத்துப் போராடும் இந்தியாவின் முயற்சி மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. பிற நாடுகளுக்கு மருந்துகளையும், மருத்துவப் பொருட்களையும் வழங்கி உதவியதன் மூலம் இந்தியாவின் நற்பெயர் அதிகரித்துள்ளது.

தைவான், தென் கொரியா, நியூசிலாந்து போன்ற நாடுகள், வளர்ந்த நாடுகளை விட இந்த சூழலில் திறம்பட செயல்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்று பயங்கரவாத அமைப்புகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியுள்ளது. தலிபான் அமைப்பு உலக சுகாதார மையத்துக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கிறது. அதேபோல் பிரேசிலின் ரியோ டி ஜெனிடோவில் உள்ள மாபியா கும்பல், ஊரங்கை தீவிரமாக பின்பற்ற மக்களை வலியுறுத்தியுள்ளது.

கரோனா தொற்றால் குறைந்த மக்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கொண்டாடும் புதிய கலாச்சாரம் உருவாகியுள்ளது. மது மற்றும் புகையிலையை உட்கொள்பவர்கள் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மக்கள் கூட்டம் நிறைந்த பெரிய மால்களுக்கு செல்வதை தவிர்த்து, ஆன்லைன் ஷாப்பிங்குக்கு மக்கள் முக்கியத்துவம் அளிப்பார்கள். கோவிட் 19 இந்த உலகத்தை தொழில்நுட்ப மையமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. கல்வி மையங்கள் முழுவதுமாக ஆன்லைன் தளங்களின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது.

இந்த சூழலில் உலகத்தோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும் அல்லது வேறுபட்டு நிற்க வேண்டும், இதில் ஏதோ ஒரு முடிவு நம்முடையது. நாம் வேறுபட்டு நின்றால் நெருக்கடியை சந்திப்பதோடு, எதிர்காலத்தில் பேரழிவையும் சந்திக்க நேரும். அதேசமயம் ஒன்றுபட்டால் கரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றிபெறுவதுடன், எதிர்காலங்களில் மனித இனத்தை அச்சுறுத்தும் பெருந்தொற்றையும் நம்மால் சமாளிக்க முடியும் என்கிறார் இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் யுவல் நோவா ஹராரி.

இதையும் படிங்க: உலக ஹீமோபிலியா தினம் - நாம் அறிந்துகொள்ள வேண்டியவை...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.