ETV Bharat / international

காஷ்மீர் பிரச்னைகளில் தலிபான்களுக்கு விருப்பமில்லை - அமர் சின்ஹா

தலிபான்களின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷேர் முகமது அப்பாஸ், காஷ்மீர் பிரச்னையில் சுமுகமான முடிவு காணும்வரை டெல்லிக்கு தங்களுக்குமான நட்புறவு சாத்தியமில்லை என ட்வீட் செய்தது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் முன்னாள் இந்திய தூதரும், தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவின் உறுப்பினருமான அமர் சின்ஹா, மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுக்கு பேட்டியளித்துள்ளார்.

Taliban
Taliban
author img

By

Published : May 22, 2020, 9:37 PM IST

Updated : May 23, 2020, 12:09 PM IST

தலிபான்களின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷேர் முகமது அப்பாஸ், காஷ்மீர் பிரச்னையில் சுமுகமான முடிவு காணும்வரை டெல்லிக்கு தங்களுக்குமான நட்புறவு சாத்தியமில்லை என ட்வீட் செய்தது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் முன்னாள் இந்திய தூதரும், தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவின் உறுப்பினருமான அமர் சின்ஹா, மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுக்கு பேட்டியளித்துள்ளார்.

இப்பிரச்னை குறித்து அமர், காஷ்மீர் பிரச்னைகளில் தலிபான்களுக்கு விருப்பமில்லை என நினைக்கிறேன். பாகிஸ்தானை சேர்ந்த சில பிரிவினர் பார்க்கும் வேலை இது. காஷ்மீர் விவகாரத்தை பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானுக்குள் மீண்டும் அமெரிக்க படையின் ஆதிக்கத்தை கொண்டுவர பாகிஸ்தான் முயற்சிக்கிறது. காஷ்மீர், ஆப்கானிஸ்தான் பிரச்னைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது பாகிஸ்தான்.

போர் சூழல் நிறைந்த ஆப்கானிஸ்தானின் தேசிய அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்தியா. தலிபான் செய்தித் தொடர்பாளர் அந்த சர்ச்சையான ட்வீட்டுக்கு மறுப்பு தெரிவித்து, இஸ்லாமிய அமீரகம் தனது அண்டை நாடுகளின் பிரச்னைகளில் தலையிடுவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.

தலிபான்கள் இதேபோன்ற ட்வீட் ஒன்றை காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கத்தின் போதும் பதிவு செய்திருந்தது. பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர், இது தோஹாவில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையை பாதிக்கும் என தெரிவித்திருந்தார். அப்போது தலிபான் செய்தித் தொடர்பாளர், இந்த இரு பிரச்னைகளுக்கும் சம்பந்தமில்லை. சட்டப் பிரிவு 370 என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், அதை நாங்கள் மதிக்கிறோம், எங்களுக்கும் காஷ்மீர் பிரச்னைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றார்.

இந்த சர்ச்சைகள் தொடர்பாக தலிபான் செய்தித்தொடர்பாளர்கள் ஷேர் முகமது அப்பாஸ், சுஹேல் ஷாஹீன் ஆகியோர் தெளிவான விளக்கமளிக்க வேண்டும். அதன்மூலமே இந்தத் தேவையற்ற சர்ச்சைகள் முற்றுபெறும் என்கிறார் அமர் சின்ஹா.

2018ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற தலிபான் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட முன்னாள் தூதர்களில் அமர் சின்ஹாவும் ஒருவர். இதற்கு 18 ஆண்டுகள் முன்புவரை தலிபான்களுடனான நேரடி பேச்சுவார்த்தைகளில் இந்தியா நேரடியாக பங்கேற்றதில்லை. ஆப்கான் உதவியுடனே அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது.

சமீபத்தில் டெல்லி வந்திருந்த அமெரிக்க சிறப்பு தூதர் சல்மே கலில்சாத், இந்தியா தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆப்கானின் அரசியல் விவகாரங்களில் பங்கெடுக்க வேண்டும் என குறிப்பிட்டது பற்றி அமரிடம் கேட்டதற்கு, இந்தியா அதற்கு தயாராகதான் இருக்கிறது. ஆனால், தலிபான்கள் தங்கள் நோக்கம் என்ன என்பதை நிரூபிக்க வேண்டும். அரசியல் தலையீடுகளில் இந்தியாவுக்கு எந்தவித பிரச்னையுமில்லை. தலிபான்கள் அரசியல் சக்தியாக மாற வேண்டும். வன்முறையை கைவிட்டு, ஆப்கான் மக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

அமர் சின்ஹா, மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுடன் உரையாடல்

இந்தியா மட்டுமே காபுல் முதல் அஃபர் வரை கண்காணித்துவருகிறது என்பது சரியல்ல. நாங்கள் எதுவும் செய்யவில்லை என சொல்வது, தவறான புரிதல். அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் பொதுவில் நடத்த வேண்டும் என்ற அவசியமில்லை. நம் தூதரகம், தூதர் மற்றும் அலுவலர்கள் தொடர் செயல்பாட்டில்தான் உள்ளனர். அவர்கள் ஆப்கான் அரசுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். மறைவான பேச்சுவார்த்தைகளில் எனது பங்களிப்பு இல்லை. அங்கு பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். அங்குள்ள எங்கள் நட்பு சக்திக்கு சரியான பதையை வகுத்துத் தருவதே எங்கள் வேலை என அமர் குறிப்பிடுகிறார்.

கோவிட்-19 நெருக்கடியால் ஜலால்பாத் மற்றும் ஹெராட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட்டது குறித்து கேட்டதற்கு, ஹெராட் மற்றும் ஜலால்பாத்தில் உள்ள தூதரகங்கள் மூடப்பட்டதற்கு காரணம், அவை அமைந்துள்ள இடங்கள். மக்கள் வைரசைக் கண்டு அஞ்சுவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஹெராட் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. அதனால் தூதரகங்கள் மூடப்பட்டது ஒரு தற்காலிக நடவடிக்கைதான். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

அமெரிக்க - தலிபான் அமைதி ஒப்பந்தம், ஆப்கான் பேச்சுவார்த்தைகள், தலிபான்கள் மற்றும் IC-814 விமானக் கடத்தலில் இந்தியாவின் அவநம்பிக்கை என பல்வேறு விஷயங்கள் குறித்து அமரிடம் கேட்டறிந்தார் பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மா.

கேள்வி: தோஹாவில் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க - தலிபான் அமைதி ஒப்பந்தம் உடைவதற்கான சாத்தியக்கூறு எந்த அளவில் உள்ளது?

பதில்: அது உண்மையில் அமெரிக்க - தலிபான் அமைதி ஒப்பந்தம் கிடையாது. ஆப்கானுக்கு அமைதியை வழங்குவதற்கான ஒப்பந்தம். ஆப்கான் உள் பேச்சுவார்த்தைகள் மூலமே அமைதி பிறக்கும். பிப்ரவரி 29ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆப்கானில் உள்ள தனது படையை அமெரிக்கா பின்வாங்க வேண்டும். அதற்கு சில காலம் ஆகும். எத்தனை கைதிகளை விடுவிக்க வேண்டும், தலிபான்களின் பயணத் தடை நீக்கம் உள்ளிட்ட பல காரணிகள் அதில் உள்ளன. அதேபோல் ஆப்கானில் அரசு அமைத்து, தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் பிரச்னை. இதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ஆப்கான் உள்நாட்டு பேச்சுவார்த்தைக்கான தேதி மார்ச் 10 என அறிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 9 அன்றுதான் அதிபர்களான கானி மற்றும் அப்துல்லா அப்துல்லா பதவியேற்றனர். இவர்கள் இருவருக்கும் பதவியேற்பு விழாக்களில் தனித்தனி சத்தியப் பிரமாணங்கள் செய்வது திட்டம். ஆனால் தற்போது பிரச்னை இல்லை. இந்த சூழலில் தலிபான்களை உள்நாட்டு பேச்சுவார்த்தைக்கு இணைந்துக் கொண்டிருப்பது மிக முக்கியமான நடவடிக்கை ஆகும்.

கேள்வி: அமெரிக்க-தலிபான் ஒப்பந்தத்தின் பின்னணியில் கடந்த பத்து ஆண்டுகளில் ஆப்கான் அடைந்த அரசியல் ஆதாயங்கள் எந்த அளவு ஆபத்தில் உள்ளன?

பதில்: அந்த ஒப்பந்தம், ஆப்கானிஸ்தானில் தலிபான் இயக்கத்தை முக்கிய அரசியல் கட்சியாக உருவெடுக்க உதவுகிறது. இதனை தலிபான்கள் நல்லெண்ணத்துடன் உணர்ந்து செயல்பட்டால், அது நல்ல முடிவைத் தரும் என நினைக்கிறேன். இதன்மூலம் ஆப்கான் மக்கள் நீண்டகாலமாக விரும்பும் வன்முறை ஒழிப்பு சாத்தியமாகும். பயங்கரவாத கும்பல்கள் மற்றும் பயங்கரவாதத்தை வளர்த்தெடுப்பவர்களுடனான தலிபான் இயக்கத்தினரின் தொடர்பு துண்டிக்கப்படும்.

கேள்வி: அமெரிக்க அதிகாரிகள் இந்த ஒப்பந்தம் மூலமாக 80 சதவிகித வன்முறை குறைந்திருப்பதாக கூறுகின்றனர். ஆனால், தலிபான்கள் அதற்கு ஏற்றார்போல் நடந்துகொண்டதாக தெரியவில்லையே? ஆப்கானில் உள்ள 34 மாகாணங்களில், கடந்த 2 நாட்களுக்குள் 20 மாகாணங்களில் வன்முறை நிகழ்ந்ததாக தகவல் பதிவாகியுள்ளது. இது எங்கு போய் முடியும்?

பதில்: எங்கள் பார்வையில் இந்த ஒப்பந்தமானது ஆப்கானியர்கள் மற்றும் ஆப்கான் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறையை தடுப்பதற்கான வழிவகை செய்யவில்லை. 7 நாட்களுக்கு வன்முறை சம்பவம் குறைக்கப்படும் என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தக்கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கம். ஆப்கான் அரசு அல்லது அதன் மாகாணங்கள் மீதான வன்முறையை நிறுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை.

உள்நாட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கும் முன் இரு மாகாண தலைநகர்களையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதே தலிபான்களின் எண்ணமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதிகார பங்களிப்பு தலிபான்களை முன்பைவிட பலம்பொருந்தியவர்களாக மாற்றிவிடும். அதுமட்டுமல்லாது அவர்கள் நினைத்தற்கு மேல் அடையக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.

கேள்வி: சிறுபான்மை சீக்கியர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள், குண்டுஸ் மகப்பேறு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் ஐஎஸ் கொரசானின் செயல் என அமெரிக்க சிறப்பு தூதர் தெரிவிக்கிறார். ஆனால், அதிபர் கானி அதனை தலிபான்களின் செயல் என்கிறார்... இதை இந்தியா எப்படி பார்க்கிறது?

பதில்: உண்மை என்னவென்றால், அனைத்து பயங்கரவாதக் குழுக்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அதை பிரித்துப் பார்த்து அடையாளம் காணுவது கடினம். பயங்கரவாத குழுக்கள் தங்களுக்குள் மனிதவளம், தத்துவம், தந்திரங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்கின்றன. பயங்கரவாதிகளுக்குள் யார் நல்லவர், யார் கெட்டவர் என அடையாளம் காண்பது முறையல்ல. வன்முறையின் மூலம் பயங்கரவாத கும்பல்கள் ஆப்கான் மண்ணில் உளவியல் ரீதியாக விளையாட்டை நிகழ்த்தி, அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறது. இதனால் உள்நாட்டு பேச்சுவார்த்தைக்கு முன் அவர்களின் அத்தனை கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலை ஏற்படுத்த முயல்கிறது. பேச்சுவார்த்தைக்கு முன் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.

தலிபான்கள் நியாயப்படுத்த முடியாத சில தாக்குதல்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவான பயங்கரவாத குழுக்கள் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், எந்தக் குழு இதை செய்கிறது என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ள வேண்டும். ஆப்கானில் நடைபெறும் வன்முறைகளுக்கு கடந்த கால வரலாறும், பின்னணியும் இருப்பதை ஆப்கானியர்கள் அறிவார்கள். ஆனால், தற்போது தலிபான்கள் அரச சக்தியாக மாறியிருப்பதால் இந்த வன்முறைக்கான பொறுப்பிலிருந்து அவர்களை விடுவித்து, வன்முறையற்ற சக்தியாக சித்தரிக்கின்றனர். தாங்கள் வன்முறையற்ற சக்தி என தலிபான்கள் நிரூபிக்க வேண்டும்.

கேள்வி: தலிபான்களுடன் இந்தியா நீண்ட நாள்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. ஆனால், அந்த அணுகுமுறையில் மாற்றம் தென்பட்ட பிறகான காலத்தில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற தலிபான்களுடனான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இருவர்களில் நீங்களும் ஒருவர். தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ரைசினா பேச்சுவார்த்தையின்போது தெரிவித்தார். தலிபான்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை ஈடுபடுவதில் இந்தியாவுக்கு என்ன லாபம்?

பதில்: ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தரப்பினருடனும் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபடும். அதில், நான் தெளிவாக உள்ளேன். ஆப்கானிஸ்தான் நம் அண்டை நாடுகளில் ஒன்று. அனைத்து அரசியல் அமைப்புகளுடனும் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆப்கான் மக்களை படுகொலை செய்வதை நிறுத்தி, அரசியல் அமைப்பாக மாறிவிட்டதை தலிபான் நிருபித்துள்ளது. இதுகுறித்த மற்றவர்களின் கருத்தை நான் அறிவேன். சொந்தமான கொள்கையை இந்தியா வகுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். பிராந்தியத்தின் முடிவுகளை மாற்றியமைப்பதில் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பதில் நம்பிக்கையாக உள்ளேன். அதை விட்டுவிட்டு மற்றவர்களின் கருத்தை கேட்டு அதுபடி செயலாற்றினால், நம்மால் பிராந்தியத்தின் வலிமையான நாடாக மாறுவதில் சிக்கல் ஏற்படும்.

மற்ற பிராந்திய நாடுகளுடன் முதன்முதலாக தலிபான்கள் மாஸ்கோவில்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வரலாற்று சிறப்புமிக்க ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற உள்நாட்டு உரையாடலானது ஒட்டுமொத்த பேச்சுவார்த்தையையும் ஜனநாயகமயமாக்கியுள்ளது. அமெரிக்க, தலிபான் பேச்சுவார்த்தையின் இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. தோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கத்தார் நாட்டை தவிர வேறெந்த நாடும் கலந்து கொள்ளவில்லை. முக்கிய அமைப்புகளான நாட்டோ, ஆப்கானிஸ்தான் அதில் கலந்து கொள்ளவில்லை. எனவே, தோஹா பேச்சுவார்த்தையில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

முன்பை காட்டிலும் நாம் தற்போது நல்ல நிலையில் உள்ளோம், ஆக்கப்பூர்வமான பங்களிக்க இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது. ஜனநாயக குடியரசு ஆப்கானிஸ்தான் தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததால், அதனை ஆதரிப்பதையே நாம் வழக்கமான கொள்கையாக கொண்டுள்ளோம். அது நம் நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான உயிரை காவு வாங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர தலிபான் உட்பட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இதுவே நாம் ஆப்கான் மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி. ஆப்கான் மக்களை கொன்று குவித்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் தனக்கு எதிரி எனச் சொல்லி கொள்ளும் தலிபான்கள், நாட்டின் 30 விழுக்காடு பகுதிகள் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது எனச் சொல்லி கொள்ளும் தலிபான்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை வீழ்த்த ஏன் ஆப்கான் படைகளுடன் ஒன்றிணைய கூடாது?

கேள்வி: ஆப்கானிஸ்தானில் நடைபெறும் முன்னேற்றங்களை காண இந்தியாவுக்கு பொறுமை உள்ளதா? நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு அமெரிக்க படைகளை திரும்ப பெற அமெரிக்கா முனைப்பு காட்டிவருகிறது. தலிபான்களுடன் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அமெரிக்க சிறப்பு தூதர் ஜால்மே கலில்ஜாத் சமீபத்தில் டெல்லிக்கு வந்தபோது தெரிவித்திருந்தார்.

பதில்: ஆப்கான் உள்நாட்டு பேச்சுவார்த்தையினை வேகப்படுத்த யாராலும் முடியாது. ஆப்கான் தலிபான் அமைதி ஒப்பந்தத்தில் கூட, அமெரிக்க படைகளை திரும்பபெறுவதற்கான காலக்கெடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உள்நாட்டு பேச்சுவார்த்தை எப்போது முடியும் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. முன்னேற்றகளை காண நமக்கு நேரமில்லை என்பதில் உண்மை இல்லை. அனைத்தையும் மறந்து மன்னித்து நல்லுறவைப் பேணுவது குறித்து ஆப்கான் மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். அதில் தலிபான்களின் பங்கும் உள்ளது. அதிகப்படியான பயன்களை அடைய உள்நாட்டு பேச்சுவார்த்தையை வேகப்படுத்துவதில் தலிபான்கள் முனைப்பு காட்டுவார்கள் என நான் நினைக்கிறேன். இந்த விவகாரத்தில் நாம் ஒன்றும் செய்ய வில்லை என்பதில் உண்மை இல்லை. நல்லுறவை பேணும் பேச்சுவார்த்தைகள் பொதுவெளியில் நடைபெற வேண்டிய அவசியமில்லை. நல்ல முடிவுகளை கண்டதால் ரகசிய பேச்சுவார்த்தை நல்ல தாக்கத்தை உண்டாக்கும்.

கேள்வி: ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா?

பதில்: நான் அதில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால், அனைத்து நேரத்திலும் இந்தியா பின்வாங்காது. பல்வேறு முன்னேற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. பழைய நண்பர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதன் மூலம் சில சமயம் வெற்றியை காண முடியும். நமக்கு பிரச்னையே அதிகமான நண்பர்கள் இருப்பதுதான். எனவே, நம்மால் ஒரு பக்கம் இருக்க முடியாது.

கேள்வி: காபூல், தோஹா பேச்சுவார்த்தைகளின் மூலம் நாம் பெறப்போவது என்ன? 90களில் நடைபெற்றது போல் இல்லாமல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினால் என்ன நடக்கும்? இச்சூழிலில், இந்தியாவுக்கு அச்சமூட்டும் வகையில் இருக்கக் கூடிய காரணிகள் எவை?

பதில்: தலிபான்கள் கொஞ்சம் கூட மாறவில்லை? அதை எண்ணி நாம் அச்சப்பட வேண்டும். 1996ஆம் ஆண்டு சூழலை மீண்டும் கொண்டு வர தலிபான் விரும்புகிறது. ஆப்கான் மக்கள் பிரிந்து, 1999ஆம் ஆண்டு நடைபெற்ற போர் போல் நிகழ மீண்டும் வாய்ப்புள்ளது. அது மோசமான சூழல். தலிபான்கள் பொதுவெளியிலும் இடைத்தரகர்கள் மூலமும் தாங்கள் மாறிவிட்டதாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால், அதிகாரத்தை பகிர அது தயாராக இல்லை என்பதே என் புரிதல். அனைத்து தரப்பினருடனும் முதலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். வழிகாட்டுதல் உருவாக்கப்பட வேண்டும். நாட்டை எப்படி உருவாக்க வேண்டும் என்ற தலிபான்களின் விருப்பப் பட்டியல் குறித்த தகவல் கசிந்துள்ளது. ஆனால், அதனை தலிபான்கள் மறுத்துள்ளனர். அந்த தகவலை கருத்தில் கொண்டால், தலிபான்களின் நிலைபாட்டில் மாற்றம் வரவில்லை என்றே கருத வேண்டும். பெண்களின் உரிமை, ஜனநாயகம், ஆப்கான் பாதுகாப்பு படைகள் போன்ற விவகாரங்களில் தலிபான்களுக்கு தெளிவு இல்லை. வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து பயங்கரவாதத்தை கைவிடுவோம் என்ற உறுதிமொழியினை தலிபான்கள் சர்வதேச சமூகத்திற்கு அளித்துள்ளது. பொய்யான கருத்துகளை வெளியிட்டு சர்வதேச சமூகத்தை ஏமாற்ற மாட்டார்கள் என்பதில் நான் நம்பிக்கையாக உள்ளேன்.

இதையும் படிங்க: 'தந்தையைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு; தீர்ப்பைக் கடவுள் பார்த்துக்கொள்வார்'

Last Updated : May 23, 2020, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.