ETV Bharat / international

இன்று நள்ளிரவு முதல் எதுவும் நடக்கலாம்! பொதுமக்கள் அறியவேண்டிய எச்சரிக்கை தகவல்கள் - இன்று நள்ளிரவு முதல் எதுவும் நடக்கலாம்

அவசரக் கால தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் அதுக்குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள் பின்வருமாறு.

பொதுமக்கள் அறியவேண்டிய எச்சரிக்கை தகவல்கள்
author img

By

Published : Apr 22, 2019, 7:04 PM IST

Updated : Apr 22, 2019, 7:10 PM IST

குண்டு வெடிப்பு காரணமாக இலங்கையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசர கால சட்டம் அமலில் உள்ளபோது காவல்துறையினருக்கு உண்டான அதிகாரங்கள் என்னென்ன?

அவசரக் கால சட்டம் என்றால் என்ன

  • அவசரக் கால தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் முன் அனுமதியின்றி காவல்துறையினர் பயங்கரவாதிகள் என சந்தேகிப்பவர்களை சுடலாம்.
  • இந்த காலகட்டத்தில் முப்படையினரும் 24 மணி நேரமும் கடமையில் இருக்க வேண்டும். விடுமுறைகள் எடுக்க முடியாது.
  • இந்த சட்டத்தின் கீழ் நபரொருவர் எந்நேரத்திலும் எவ்வித காரணமின்றியும் கைது செய்யப்படலாம்.
  • இரண்டு பேருக்கு அதிகமாக பொது இடங்களில் (தேசியப் பாதுகாப்புக்குப் பிரச்னை இல்லாத, அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளை தவிர்ந்த வேறு இடங்களில்) கூடுதல், திட்டம் தீட்டுதல், அதிக ஒலி எழுப்புதல், ஆயுதங்களை உடைமையில் (முகச் சவரம் செய்யும் கத்தி, ஊசி உட்பட) வைத்திருத்தல் என அனைத்தும் பெரிய குற்றமாகக் கருதப்படும்.
  • அத்துடன் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைத்தல், நிதி சேகரித்தல் உட்பட அனைத்தும் இதற்குள் அடங்கும்.
  • சாதாரண உரிமையியல் கடமைகளுக்குக் கூட காவல்துறையினரின் கைகளில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர், விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்படுவர்.
  • கைது செய்யப்படும் போது யாராவது தப்பியோட முயன்றால் சுட்டுப்பிடிப்பதற்கான அதிகாரமும் இதில் அடங்கும்.
  • அதேவேளை கைது செய்யப்படும் நபரை, தேவை ஏற்பட்டால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கும் உரிமை உண்டு.
  • கைது செய்யப்பட்டவர்களை புலனாய்வு பிரிவினர் விசாரிப்பதற்கான சட்ட வழிமுறைகளும் இதில் அடங்கும்.
  • மேலும், அவசரகாலச் சட்டமானது மக்களின் அல்லது வாகனங்களின் போக்குவரத்துக்களைத் தடை செய்யவும், பாதுகாப்பு பகுதிகளை உருவாக்கி, அங்கு வெளியிலிருந்து செல்பவர்களைத் தடுக்கவும் அனுமதி அளிக்கின்றது.
  • பாதுகாப்பு பிரிவினருக்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள், குறிப்பிட்ட பகுதிக்கு வருவதற்கும் அல்லது குறிப்பிட்ட பகுதியில் வசிப்பதற்கும் தடை செய்யும் அதிகாரமும் இச்சட்டத்தில் உண்டு.
  • மக்கள் வாழும் பகுதிகளில், உடனடியாக பாதுகாப்புப் பகுதியை உருவாக்கி, அவர்களைப் பாதுகாக்கவும் காவல்துறையினருக்கு அதிகாரம் அளிக்கும்.
  • யாரையும் அவர்களின் வீடுகளில் வைத்துக் கைது செய்வதற்கு அனுமதி வழங்க, உள்துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் வழங்கும்.
  • நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பவர்கள் எனச் சந்தேகப்படும் யாரையும் கைது செய்து விசாரணை செய்ய முடியும்.
  • விழா மண்டபங்களையோ, திரையரங்குகளையோ, கூட்டம் நடக்கும் இடங்களையோ, உடனடியாக மூடுவதற்கும் அங்குள்ளவர்களை வெளியேற்றுவதற்கும் அனுமதி அளிக்கும்.
  • தனிநபரிடம் இருக்கும் ஆயுதங்களை அனுமதி பெற்றிருந்தாலும் கூட பறிமுதல் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
Last Updated : Apr 22, 2019, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.