இலங்கையில் ஈஸ்டர் நாளன்று நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து கிடைத்த உளவுத் துறை தகவல்களை அலட்சியப்படுத்தியதாக, அந்நாட்டு காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா, பாதுகாப்புத் துறை செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என, அந்நாட்டு அதிபர் சிறிசேனா வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இலங்கை காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா அதிகாரப்பூர்வமாக பதவி விலகாத நிலையில், தற்காலிக காவல்துறை தலைவராக சந்தன விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். சந்தனா விக்ரமரத்ன தற்போது அந்நாட்டு காவல் துறை துணைத் தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார்.