இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இலங்கையையே உலுக்கியெடுத்த இந்தத் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விசாரணையின் அறிக்கையை வரும் அக்டோபர் 23ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக விசாரணைக்குழுத் தலைவரும், நாடாளுமன்றத் துணைத் தலைவருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, சுமார் 60 பேரிடம் விசாரணை மேற்கொண்டு விரிவான அறிக்கை தயாரித்துள்ளோம்.
இந்த அறிக்கையை வரும் அக்டோபர் 23ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம்" எனக் கூறினார்.
இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இலங்கை குண்டுவெடிப்புக்கு போதைப் பொருள் கடத்தல்காரர்களே காரணம்: சிறிசேன