இலங்கை ராணுவ தளபதியாக இருப்பவர் ஷஷேந்திர சில்வா. 2009ஆம் ஆண்டு இறுதிகட்டப் போரின்போது பல்வேறு போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக, இவர் மீது ஐநா மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியிருந்தது.
இதனால், ஷவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாடு தடை விதித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசும், எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குனவர்தென கூறுகையில், "எல்டிடி என்ற பயங்கரவாத குழுவை எதிர்த்தே (தளபதி) சில்வா போராடினார். இதுகுறித்து அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் இரண்டு கோபுரம் தாக்குதலுக்குப் பிறகு பல்வேறு அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என அமெரிக்கா கூறியது," என்றார்.
இதையும் படிங்க : டெல்லியில் மாணவர்களை போலீஸ் மூர்க்கத்தனமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு