இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தில் தேவாலயத்திலும், நட்சத்திர விடுதியிலும் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் கண்டனம் எழுந்தது. இந்த குண்டு வெடிப்பு குறித்து இலங்கை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக பாதுகாப்புத்துறை முன்னாள் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவை, தற்போது இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.