கடந்த 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் உளவு ரகசியங்களை விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்ட் ஸ்னோடன்.
உலகின் மற்ற நாடுகளின் தலைவர்களின் செயல்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருவதை ஸ்னோடன் பகிரங்கப்படுத்தினார். இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.
இதன் காரணமாக அவர் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார். ஸ்னோடனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா பல முறை வலியுறுத்தியும் ரஷ்யா அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.
இந்நிலையில், ஸ்னோடனுக்கு ரஷ்யா நிரந்தர குடியுரிமையை வழங்கியுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பத்தை அவர் கடந்த மார்ச் மாதமே விண்ணப்பித்துவிட்டார்.
இருப்பினும், கரோனா காரணமாகவும் அதனால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய காலதாமதம் ஆனதாகவும் அவரது வழக்கஞர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிரம்ப் - ஜோ பிடன் இறுதிகட்ட விவாதம்!