இலங்கையில் 2015-19ஆம் ஆண்டுவரை நடந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதிபர் மைத்திரபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் அரசியில் காழ்ப்புணர்ச்சி மேலோங்கி இருந்ததாகக் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச புதிதாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ந தலைமைத் தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உக்ரைன் விமானத்தை தாக்கியது நாங்க தான் - ஈரான்