இலங்கையில் ஈஸ்டர் அன்று தேவலாயங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 253 பேர் பலியாகினர். இதையடுத்து அந்நாட்டுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தன.
சுற்றுலா வருவாயை மிக முக்கிய பொருளாதாரமாக கொண்ட இலங்கைக்கு இது பெரும் சரிவை ஏற்படுத்தியது. 70 விழுக்காடு விடுதி அறை முன்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் தற்போது இலங்கையில் இயல்புநிலை திரும்பியுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் எந்த கவலையும் இன்றி வரலாம்.
தங்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையை உலகநாடுகள் வாபஸ் பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன் இதே கோரிக்கையை அதிபர் சிறிசேனவும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.