ETV Bharat / international

தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - இலங்கை பாதுகாப்பு செயலர் ராஜினாமா! - ISIS

கொழும்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு ஏற்பட்டதையடுத்து அந்நாட்டு அதிபரின் வலியுறுத்தலைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

easter
author img

By

Published : Apr 26, 2019, 8:34 AM IST

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளன்று ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 359 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தேவாலயங்கள், நட்சத்திரத் தங்கு விடுதிகளில் ஏற்பட்ட குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து இலங்கை அரசுக்கு இந்திய உளவுத்துறை ஒரு வாரம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை அலட்சியப்படுத்தியதாக இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பெரும் அழுத்தத்திற்குள்ளான அதிபர் சிறீசேன அந்நாட்டு பாதுகாப்பு செயலரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, இலங்கை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ தொடர் குண்டுவெடிப்புக்குப் பொறுப்பேற்கும் விதமாக தற்போது ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் பல்வேறு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மீதும் அதிரடி நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பதற்றத்திலிருந்து மீளாத இலங்கையில் பள்ளி, கல்லூரிகள் கடந்த நான்கு நாட்களாகச் செயல்படவில்லை. பாதுகாப்புக் காரணமாக இலங்கை வான்வெளியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

resign
ராஜினாமா கடிதம்

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/international/asia-pacific/sl-series-blast-defence-secretary-quits-govt-bans-drone-1/na20190425224847885

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.