உலகையே ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பானது சீனாவில் தான் முதலில் தோன்றியது. அங்குள்ள வூஹான் பகுதியில் வைரஸ் தீவிரமாகப் பரவத்தொடங்கியதையடுத்து அந்நகரம் தனிமைப்படுத்தப்பட்டு, கடுமையான முறையில் வைரஸ் தொற்று எதிர்கொள்ளப்பட்டது.
நகரில் ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறும் வகையில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டப்பட்டு, சிகிச்சைப் பணியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
அங்கு பணியாற்றிய மருத்துவர்களான யி பான், ஹூ வெய்பெங் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் கல்லீரல் கரோனா வைரஸ் காரணமாக பெரும் பாதிப்பிற்குள்ளானதை அடுத்து, இருவரின் தோலும் கருப்பு நிறமாக மாறியுள்ளன. இந்த விவரத்தை சீன ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்ததால் மருத்துவர்களுக்கு கரோனா வைரஸ் தாக்கம் சமானியர்களைவிட தீவிரமாக ஏற்படும் என்பதால் இதுபோன்ற பின்விளைவுகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: வைரஸ் தொற்றில் நாங்கள் முதலிடமல்ல - சீனாவைச் சீண்டும் ட்ரம்ப்