நேபாளத்தில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள மூன்று மலைக்கிராமங்களில் அதிக பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
முன்னதாக நிலச்சரிவில் சிக்கிய 11 பேரின் சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். இந்நிலையில் சுமார் 15 பேராவது நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் மீட்புக்குழுவினர் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
நேபாளத்தில் வழக்கமாகப் பெய்யும் பருவமழை தற்போது அதிகரித்துள்ளதால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இது வழக்கமான ஒன்று தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.