பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அனைத்து பள்ளிகளையும் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பல்வேறு நாடுகளுக்கிடையே விமான போக்குவரத்தை ரத்து செய்துவருகிறது. அப்படி கடந்த இரண்டு நாள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐந்து நாள்களாக அந்நாட்டின் பெரும்பாலான நகரங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொற்று பரவக்கூடிய இடங்களைக் கண்டறியும் நடவடிக்கையில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் முழு முடக்கத்தை அமல்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் அந்நாட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்தும் முயற்சியும் நடைபெற்றுவருகிறது.
இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத் தளங்கள், தியேட்டர்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களை மூட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வடமேற்கு சீனாவின் லான்சோ நகரத்தில் தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. இதனால், அந்த நகரத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ஒருவாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு