ETV Bharat / international

தரையிறங்கிய மாயமான ரஷ்ய விமானம்: நல்வாய்ப்பாக உயிர்பிழைத்த 17 பேர்! - மயமான ரஷ்ய விமானம்

சைபீரியா அருகே காணாமல்போனதாகக் கூறப்பட்ட பயணிகள் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளது. அதில் பயணித்த 17 பேருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

russian-plane-missing-in-siberia
17 பேருடன் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம் சைபீரியாவில் மாயம்!
author img

By

Published : Jul 16, 2021, 6:36 PM IST

Updated : Jul 16, 2021, 10:02 PM IST

மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரஷ்யன் ஏஎன்-26 ரக விமானம் நடுவானில் காணாமல்போன நிலையில், நேற்று (ஜூலை 15) சைபீரியா அருகே ஏஎன்-28 என்ற மற்றொரு பயணிகள் விமானமும் காணாமல்போனதாக தகவல்கள் வெளியாகின.

காணாமல்போன விமானத்தில் 17 பேர் பயணம் செய்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், காணாமல்போன விமானம் தரையிறங்கியதாகவும், விமானத்தில் பயணம்செய்த 17 பேருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதால் ரேடார் கண்காணிப்பிலிருந்து விமானம் விலகியதாக விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இதையும் படிங்க: பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் கோர விபத்து: 17 பேர் பலி

Last Updated : Jul 16, 2021, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.