ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்தபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு விஷம் கொடுத்ததாக மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில், அவருக்கு ஜெர்மனியில் சிகிச்சையளிக்கப்பட்டது.
அவரது உடல்நல பாதிப்பிற்கு அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின்தான் பின்னணிதான் காரணம் என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சையில் உடல் நலம் தேறி பிப்ரவரி மாதம் நவல்னி மீண்டும் ரஷ்யா திரும்பினார்.
நாடு திரும்பியவுடன் அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை வழங்கியது. இந்நிலையில், சிறையில் உள்ள நவல்னியின் உடல்நிலை மீண்டும் மோசமாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அவர் காசநோயளிகளுடன் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நைஜீரியாவில் 1,800 சிறை கைதிகள் தப்பியோட்டம்!