ETV Bharat / international

'உரிய காலத்துக்குள் எஸ்-400 இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்' - ரஷ்யா உறுதி - S 400 Putin

பிரெசிலியா: எஸ்-400 ஏவுகணை தளவாடம் உரிய காலத்திற்குள் இந்தியாவிடம் ஒப்படைப்போம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார்.

putin modi
author img

By

Published : Nov 16, 2019, 2:42 PM IST

'எஸ்-400 ட்ரையம்ப்' ஏவுகணை தளவாடத்தைக் கொள்முதல் செய்வதற்கு 2015ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இந்தியா விருப்பம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, 2018இல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வந்திருந்தபோது, ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அதிபர் விளாடிமின் புடின், 'எஸ்-400 ஏவுகணை தளவாடத்தைப் பொறுத்தமட்டில் இந்தியாவிடம் உரிய காலத்திற்குள் ஒப்படைப்போம்' எனத் தெரிவித்தார். பிரிக்ஸ் மாநாட்டையொட்டி அதிபர் புடினை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு பிரச்னை குறித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எஸ்-400 ஏவுகணை தளவாடம் வாங்கினால் அதன் மீது காட்சா (CAATSA) சட்டத்தின் கீழ் பொருளாதாரத் தடைவிதிக்கப்படும் என அமெரிக்க உயர் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தரையிலிருந்து வானில் 400 கி.மீ. தொலைவில் எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகளை வழி மறித்துத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது இந்த எஸ்-400 தளவாடம்.

இதையும் வாசிங்க : இலங்கையில் வாக்காளர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு! - சமூகவிரோதிகள் அட்டூழியம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.