ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தகுதியை நீக்கி, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் - இந்தியா இடையே பதற்றம் நிலவிவருகிறது. இருநாடுகளும் தங்களது எல்லைகளில் ராணுவத்தினரைக் குவித்துள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்க இருநாடுகளும் அமைதியைக் கையாள வேண்டும் என உலக நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானின் கில்ஜித் பகுதியில் அமைந்துள்ள ராணுவத் தலைமையகத்துக்கு சென்றிருந்த அந்நாட்டு ராணுவத் தளபதி அமர் ஜாவத் பஜ்வா, காஷ்மீர் குறித்து பேசுகையில், "ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் கிழக்கு எல்லையிலிருந்து வரும் அச்சுற்றுத்தலைகள் குறித்து நாங்கள் நன்கு அறிவோம். இந்தியாவின் தாக்குதல்களைத் தவிடுபொடியாக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
கிழக்காசியாவின் பிராந்தியப் பாதுகாப்பு கருத்தில்கொண்டு தளபதி பஜ்வபாக்கு, பாகிஸ்தான் அரசு பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.