பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகணத்தில் உள்ள குவெட்டா பகுதியில் குரு சிங் குருத்வாரா அமைந்துள்ளது. 200 வருட பாரம்பரியமிக்க இந்தக் குருத்வாரா சுதந்திரத்துக்குப் பின் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாகச் செயல்பட்டுவருகிறது.
தங்களின் மத வழிபாட்டுத் தலத்தைப் பயன்படுத்தி நிர்வகிக்கும் உரிமையை இழந்திருந்த சீக்கியர்களுக்கு, தற்போது மகிழ்ச்சி தரும் அறிவிப்பை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. அந்தக் குருத்வாரா மீண்டும் புணரமைக்கப்பட்டு வழிபாட்டுத் தலமாக மாற்றப்படும் எனவும், அதன் நிர்வாக உரிமை சீக்கிய மக்களுக்கே வழங்கப்படும் எனவும் பலுசிஸ்தான் மாகண அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை செயல்பட்டுவந்த அரசுப் பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று எனவும், 73 ஆண்டுகாலத்திற்குப் பின் பலுசிஸ்தான் அரசும், உயர் நீதிமன்றமும் சீக்கிய மக்களுக்கு அளித்த பரிசு எனவும் சீக்கிய மக்கள் குழுவின் தலைவர் சர்தார் ஜஸ்பீர் சிங் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 30 லட்சம் ஹாங்காங் வாசிகளுக்கு குடியுரிமை வழங்க தயாராகும் பிரிட்டன்